ஏ.ஆர்.ரகுமான் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி.. மாற்று தேதி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


சமீப காலமாக இசையமைப்பாளர்கள் லைவ் கான்செர்ட் என்ற பெயரில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதன்படி, இசையமைப்பாளர்கள் தாங்கள் இசையமைத்த பாடல்களை லைவ்வாக ரசிகர்கள் முன்பு பாடி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய சினிமாவில் முக்கிய இசையமைப்பாளராக இருக்கும் ஏ.ஆர் ரகுமான் மறுக்குமா நெஞ்சம் என்ற பெயரில் இசை நிகழ்ச்சியை சென்னை பனையூரில் கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் அன்றைய தினம் பெய்த கன மழை காரணமாக நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

இந்த நிலையில் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி சென்னை பனையூரில் செப்டம்பர் 10ஆம் தேதி நடைபெறும் என்றும் ஏற்கனவே வாங்கிய டிக்கெடுகளை பயன்படுத்தி நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AR Rahman live concert reschedule on September 10


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->