கிரிக்கெட் ஜாம்பவானை சந்தித்த இசைப்புயல் புயல் - வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்..! - Seithipunal
Seithipunal


திரையுலகில் "இசைப் புயல்" என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் ஏ.ஆர். ரஹ்மான் தற்போது தமிழ், இந்தி போன்ற பல்வேறு மொழிகளில் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் தமிழில் இவர் இசையில் அண்மையில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் உலகம் முழுவதும் வசூலில் ரூ.500 கோடியை நெருங்கவுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். 

இதைத்தொடர்ந்து தமிழில் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் 'பத்து தல', ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அயலான்', மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் 'மாமன்னன்' போன்ற சில படங்களுக்கு இவர் இசையமைக்கிறார். 

இந்நிலையில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானான சச்சினை சந்தித்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்களை ஏ.ஆர். ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "மாஸ்டர் பிளாஸ்டர் சச்சினுடன்" என்றுக் குறிப்பிட்டு நண்பர்களின் இலக்கு என்று பதிவிட்டுள்ளார்.

கிரிக்கெட் புயல் என்று  ரசிகர்களால் அழைக்கப்படும் சச்சின் மற்றும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானும் இணைந்திருக்கும் இப்புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் நடந்து முடிந்த சாலை பாதுகாப்பு உலகத்தொடர் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக சச்சின் விளையாடினார். அந்தப் போட்டியில், இந்திய அணியை வழி நடத்தியதோடு அந்தத் தொடரை வென்று கோப்பையையும் கைப்பற்றி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். 
 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ar rahman meet cricket player sachin


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->