ஏ.ஆர்.ரகுமான் - பிரபுதேவா கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படம்! வெளியான மாஸ் அப்டேட்! - Seithipunal
Seithipunal


பிரபுதேவா - ஏ.ஆர். ரகுமான் கூட்டணியில் முதல் முறையாக கடந்த 1994 ஆம் ஆண்டு காதலன் திரைப்படம் வெளியானது. இதனைத் தொடர்ந்து இவர்களது கூட்டணியில் மின்சார கனவு, மிஸ்டர் ரோமியோ போன்ற திரைப்படங்களும் பாடல்களும் வெளியாகி ரசிகர்களிலேயே நல்ல வரவேற்பு பெற்றது. 

இந்நிலையில் சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு ஏ.ஆர். ரகுமான் - பிரபுதேவா கூட்டணியில் புதிய திரைப்படம் ஒன்று உருவாகி வருகிறது. பிகைண்ட்வுட்ஸ் தயாரிப்பில் மனோஜ் என். எஸ். இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, அர்ஜுன் அசோகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

இந்தத் திரைப்படத்தின் தலைப்பை இன்று படக்குழு ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. அதாவது ஏ.ஆர். ரகுமான் - பிரபுதேவா கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு ''மூன்வாக்'' என பெயரிடப்பட்டுள்ளது. 

இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் ஏ.ஆர். ரகுமான் - பிரபுதேவா கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தின் தலைப்பு மிகவும் பொருத்தமாக உள்ளதாக சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AR Rahman Prabudeva movie update


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->