ஏ.ஆர்.ரகுமான்- சாய்ரா பானு விவாகரத்து!..."எல்லாமே கண்ணுக்குத் தெரியாத முடிவு" - ஏ.ஆர்.ரகுமான் உருக்கம்!
Ar rahman saira banu divorce everything is an invisible end ar rahman meltdown
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கும், சாய்ரா பானுவுக்கும் 1995-ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், இவர்களுக்கு கதீஜா, ரஜீமா என்ற 2 மகள்களும், அமீன் என்ற மகனும் உள்ளனர்.
இந்த நிலையில், ஏ.ஆர்.ரகுமானை விட்டு பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு நேற்று இரவு அறிவித்தார். இந்த பிரிவு அறிவிப்பு இந்திய சினிமாவில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ள பதிவில், நாங்கள் முப்பது வயதை எட்டுவோம் என்று நம்பினோம், ஆனால் எல்லாமே கண்ணுக்குத் தெரியாத முடிவாகத் தெரிகிறது என்றும், கடவுளின் சிம்மாசனம் கூட உடைந்த இதயங்களின் கனத்தில் நடுங்கக்கூடும் என்று கூறியுள்ளார்.
இன்னும், இந்த சிதைவில், துண்டுகள் மீண்டும் தங்கள் இடத்தைக் கண்டுபிடிக்கவில்லை என்றாலும், அர்த்தத்தைத் தேடுகிறோம் என்றும், எங்கள் நண்பர்களுக்கு, இந்த பலவீனமான அத்தியாயத்தை நாங்கள் கடந்து செல்லும்போது உங்கள் கருணைக்கும் எங்கள் தனியுரிமைக்கு மதிப்பளித்ததற்கும் நன்றி என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
நடிகர்கள் தனுஷ், ஜெயம் ரவி, ஜி.வி.பிரகாஷ் ஆகிய நட்சத்திரங்களின் விவாகரத்து வரிசையில் தற்போது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் இணைந்திருப்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Ar rahman saira banu divorce everything is an invisible end ar rahman meltdown