ஏ.ஆர் ரகுமானின் "மறக்குமா நெஞ்சம்" இசை நிகழ்ச்சி திடீர் ரத்து.!! ரசிகர்களுக்கு ஏமாற்றம்.!! - Seithipunal
Seithipunal


சென்னை அடுத்த பனையூரில் இசை புயல் ஏ.ஆர் ரகுமானின் "மறக்குமா நெஞ்சம்" இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் சென்னையில் பெய்து வரும் கனமழையின் காரணமாக இசை நிகழ்ச்சி நடைபெற இருந்த மைதானத்தில் மழைநீர் தேங்கியதால் ஏ.ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும் இந்த நிகழ்ச்சி வேறொரு நாளில் மாற்றியமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக ஏ.ஆர் ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் எனது "அன்பான நண்பர்களே... பாதகமான வானிலை மற்றும் தொடர் மழையின் காரணமாக, எனது அன்புக்குரிய ரசிகர்கள் மற்றும் நண்பர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்காக, சட்டப்பூர்வ அதிகாரிகளின் வழிகாட்டுதலுடன், கச்சேரியை கூடிய விரைவில் சிறந்த தேதிக்கு மாற்றுவது மட்டுமே அறிவுறுத்தப்படுகிறது. புதிய தேதி குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வரும்" என பதிவிட்டுள்ளார். மழையின் காரணமாக ஏ ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதால் அவருடைய ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AR Rakhuman Marakuma Nenjam concert cancelled


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->