பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த கடற்படை லெப்டினன்ட் வினய் நர்வாலுக்கு கண்ணீர் மல்க பிரியாவிடை செய்த மனைவி..! - Seithipunal
Seithipunal


ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் ஹரியானாவின் கர்னாலைச் சேர்ந்த இந்திய கடற்படை லெப்டினன்ட் வினய் நர்வால் வீரமரணம் அடைந்தார். டில்லியில் அவரது மனைவி அவரது உடலுக்கு கண்ணீர் மல்க பிரியாவிடை அளித்தார்.

வீரமரணம் அடைந்த லெப்டினன்ட் வினய் நர்வால் உடலுக்கு அஞ்சலி செலுத்த இன்று டில்லி கொண்டு வரப்பட்து, டில்லி விமான நிலைய சரக்கு முனையத்தில் மலர்வளையம் வைக்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இங்கு அவருக்கு ராணுவ மரியாதை வழங்கப்பட்டதோடு, இந்திய கடற்படையின் அனைத்து அதிகாரிகளும், வீரர்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் ​​டில்லி முதல்வர் ரேகா குப்தா, பா.ஜ.,வின் டில்லி மாநிலத் தலைவர் வீரேந்திர சச்தேவா உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்துகொண்டனர்.அத்துடன், வினய் நர்வால் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் லெப்டினன்ட் வினய் நர்வாலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

வினய் நர்வாலின் உடலுக்கு பிரியாவிடை செய்த அவரது மனைவி ஹிமான்ஷி கண்ணீர் மல்க கூறியதாவது:

'நீங்கள் ஒரு புகழ்பெற்ற வாழ்க்கையை வாழ்ந்தீர்கள், உங்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன், நாம் ஒன்றாகக் கழித்த நாட்கள் அனைத்தும் சிறந்தவை, இனி நான் எப்படி வாழ்வேன்,' என்று கண்ணீர் மல்க கூறினார். அவரது இறுதிச் சடங்குகள் கர்னாலின் மாடல் டவுனில் உள்ள தகன மேடையில் நடைபெரவுள்ளது. இதில் ஹரியானா முதல்வர் நைப் சைனியும் பங்கேற்கவுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Wife pays tearful tribute to Lieutenant Vinay Narwal was martyred in the Pahalgam terror attack


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->