7 வருட திருமண வாழ்க்கை.. மனைவியுடன் அட்லீயின் இன்ஸ்டாகிராம் பதிவு.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக பணியாற்றி, பின்னாளில் பலரின் கதைகளை நாகரீகமான முறையில் எடுத்து தன்னை இயக்குனர் ஆக்கிக்கொண்டவர் அட்லீ. 

ராஜா ராணி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான அட்லி, முதல் படத்தை பிரமாண்டமாக, காதல் திரைப்படமாக பலரையும் பேச வைத்துவிட்டார். ராஜா ராணி திரைப்படம் இன்றளவும் மறக்கமுடியாத திரைப்படமாக பலரிடம் இருந்து வருகிறது என்பதில் சந்தேகம் இல்லை. 

இதனையடுத்து, நடிகர் விஜயை வைத்து மெர்சல், தெறி, பிகில் ஆகிய படங்களையும் இயக்கினார். இந்த படங்கள் அனைத்தும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வைரல் ஆனது. இயக்குனர் அட்லீயும் பலராலும் பேசப்படும் நபராக உருவாகினர். 

இதனைத்தொடர்ந்து பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக இருந்து வரும் ஷாருக்கானை வைத்து படம் இயக்கி வரும் அட்லீ, தனது 7 ஆவது வருட திருமண வாழ்க்கையை மனைவி பிரியாவுடன் கொண்டாடினர். இந்த இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாகி, வாழ்த்து மழையில் நனைந்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

atlee wedding anniversary


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->