ஹெலிகாப்டர் - விமானம் மோதிய விபத்து.. ஒருவர்கூட உயிர்பிழைக்காத சோகம்!  - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர் மீது பயணிகள் விமானம் மோதிய விபத்தில் 67 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும் இந்த விபத்தில் சிக்கிய  ஒருவர்கூட உயிர்பிழைக்காதது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்கன் ஏர்லைன்சின் பயணிகள் விமானம் ஒன்று அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் நடுவானில் பிளாக் ஹாக் எனப்படும் ராணுவ ஹெலிகாப்டர் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது .இந்தவிபத்தானது  ரோனால்ட் ரீகன் விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர் மீது விமானம் மோதி விபத்து ஏற்பட்டது என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக கன்சாசிலிருந்து பறந்த வந்த பயணிகள் விமானம் அங்கு தரையிறங்க இருந்தது என கூறப்படுகிறது.

விபத்துக்குள்ளான விமானத்தில் 64 பேரும், ஹெலிகாப்டரில் 3 ராணுவ வீரர்களும் பயணம் செய்ததாக முதல் கட்ட விசாரணையில் கூறப்படுகிறது. மேலும் விமானம் மற்றும் ஹெலிகாப்டர் இரண்டும் போடோமாக் என்ற ஆற்றில் விழுந்தநிலையில்  மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்றுவந்தது.இதையடுத்து  போடோமாக் ஆற்றில் இருந்து முதலில்18 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் ராணுவ ஹெலிகாப்டர் மற்றும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானமும் நடுவானில் மோதிய விபத்தில் 67 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்தில் சிக்கிய  ஒருவர்கூட உயிர்பிழைக்காதது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது.முதற்கட்ட விசாரணையில்  இந்த விமான பேரழிவு ஏற்பட்ட நேரத்தில் விமான நிலையத்தின் தரை கட்டுப்பாட்டு ஊழியர்கள் வழக்கத்தை விட குறைவான எண்ணிக்கையில் இருந்ததாக தெரியவந்துள்ளது.

மேலும் ஃபெடரல் ஏவியேஷன் அறிக்கையின்படி, மோதல் நடந்தபோது, ரீகன் நேஷனலில் உள்ள கோபுரத்தில் இரண்டு பேருக்கு ஒதுக்கப்பட்ட பணியை ஒரு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் மட்டுமே செய்து கொண்டிருந்தார் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Helicopter-plane crash The tragedy that no one survived


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->