விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் கூடாது- பள்ளிகளுக்கு கல்வித்துறை கடும் எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


புதுவையில் எந்த ஒரு தனியார் பள்ளியும் மாலை 6 மணிக்கு மேல் சிறப்பு வகுப்புகள் மற்றும் பிற திறன் சார்ந்த வகுப்புகளை நடத்தக்கூடாது என்றும் இதில் ஏதேனும் விதிமுறை மீறல் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி தெரிவித்துள்ளார். 

புதுவையில் உள்ள தனியார் பள்ளிகள் வேலை நாட்களில் மாலை 6 மணிக்கு மேலும், விடுமுறை நாட்களிலும் சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் மாணவர்களை துன்புறுத்துவதாக பல்வேறு புகார்கள் சமூக அமைப்புகள் மூலம் புகார்கள் எழுந்தது. மேலும் இது தொடர்பாக கல்வித்துறைக்கும் பல்வேறு புகார்கள் சென்றன.

இந்தநிலையில் புதுவை கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்,

அதில் அவர் கூறியிருப்பதாவது:-புதுவை யூனியன் பிரதேசத்தில் இயங்கும் சில தனியார் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தையும் கடந்தும், வார விடுமுறை நாட்களிலும், அரசு விடுமுறை அளிக்கும் தினங்களிலும் சிறப்பு வகுப்புகளை நடத்துவதாக கவனத்துக்கு வந்துள்ளது என்றும்  இது மாணவர்களுக்கு மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளது.

எனவே பின்வரும் உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன என்றும் அதன்படி எந்த ஒரு தனியார் பள்ளியும் மாலை 6 மணிக்கு மேல் சிறப்பு வகுப்புகள் மற்றும் பிற திறன் சார்ந்த வகுப்புகளை நடத்தக்கூடாது என்றும் அதேபோல் வார விடுமுறை, பொதுவிடுமுறை, அரசு விடுமுறை அறிவிக்கும் நாட்களிலும் இத்தகைய வகுப்புகளை நடத்தக்கூடாது என்று சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த விதிமுறைகளை பள்ளி நிர்வாகங்கள் கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டும் என்றும்  இதில் ஏதேனும் விதிமுறை மீறல் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

No special classes during holidays: Education department warns schools


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->