ECR சம்பவம் திட்டமிட்ட சதி! பகிரங்க மிரட்டல் விடுக்கிறதா திமுக அரசு? அதிரவைக்கும் பின்னணி - பாஜக எம்எல்ஏ கொந்தளிப்பு!
ecr issue bjp mla condemn dmk mk stalin
தங்கள் கட்சியினரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பகிரங்க மிரட்டல் விடுக்கிறதா திமுக அரசு? என்று, பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "தங்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமைகளைப் பற்றியும், தங்களை தாக்கும் நோக்கில் துரத்திய போதை ஆசாமிகள் பற்றியும் புகார் கொடுத்த பெண்களின் மொத்த விவரங்களையும் உடனடியாக பொதுவெளியில் கசியவிடுவது எதை உணர்த்துவதற்காக?
அந்த குற்றங்களில் ஈடுபட்டவர்கள் திமுக-வைச் சார்ந்தவர்கள் என்பதால் புகாரளித்த பெண்களைப் பழி வாங்குகிறாரா தமிழக முதல்வர் ஸ்டாலின்?
தங்கள் கட்சியில் பதுங்கியுள்ள குற்றவாளிகளை யாரும் பொதுவெளியில் அம்பலப்படுத்தக் கூடாது என்பதற்கான எச்சரிக்கை மணியா இது?
அண்ணா பல்கலைக் கழக மாணவியின் விவரங்கள் வெளியானது தெரியாமல் நடந்த விபத்து எனில், ECR சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் வெளியானது என்ன திட்டமிட்ட சதியா? ஒருமுறை தவறு நடக்கலாம் ஒவ்வொரு முறையும் தற்செயலாகவே தவறு நடக்குமா?
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பும் கிடையாது, உண்மையான பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனையும் கிடைக்காது, நீதி கேட்டு போராடும் பெண்களுக்கு அனுமதியும் கிடையாது, இதுதான் இந்த பாசிச திமுக அரசின் திராவிட மாடலா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
ecr issue bjp mla condemn dmk mk stalin