ஏசியால் மின்சார கட்டணம் எகிறுகிறதா..? இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க..! EB BILL கம்மி பண்ணுங்க..! - Seithipunal
Seithipunal


கோடை காலம் ஆரம்பித்துள்ள நிலையில், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது. நாட்டின் பல இடங்களில் வெப்பநிலை சதமடிகிறது . இதனை சமாளிக்க பெரும்பாலும் நாம்  வீடு, அலுவகத்தில்ஏசியை அதிகமாகபயன்படுத்துகிறோம். மாத இறுதியில் மின்சார கட்டணத்தை பார்த்து பயந்து போகிறோம். ஆனால் கவலையே இல்லாமை ஏசியை பயன்படுத்த ஒரு சில விஷயங்களை நாம் சரியாக செய்தாலே மின்சார கட்டணத்தை  பாதியாக குறைக்கலாம்.

அதற்கான சில எளிய குறிப்பிகள் பின்வருமாறு:-

01.சிலர்மெயின் சுவிட்ச்சை அணைக்காமல், ரிமோட்டில் மட்டும் ஆப் செய்வார்கள். ஆனால், இவ்வாறு செய்யும் போது, ஏசி காத்திருப்பு பயன்முறையில் இருப்பதால் மின்சார தேவை இருந்து கொண்டே இருக்கும். எனவே, ஏசி பயன் இல்லாதபோது மெயின் சுவிட்ச்யை முதலில் ஆப் செய்ய வேண்டும்.

02.ஏசியில் 24 டிகிரி மனித உடலுக்கான ஐடியல் வெப்பநிலையாகும். இதிலிருந்து 01 டிகிரி அதிகரிப்பதன் மூலம், மின்சாரத்தை 06 சதவீதம் வரை சேமிக்க முடியும். எனவே, 24 டிகிரியில் ஏசியை இயக்க முயற்சிக்கலாம்.

03.ஏசியின் உட்புற அல்லது வெளிப்புற யூனிட்டில் அழுக்கு மூடியினதால், குளிர்ந்த காற்றைக் கொடுக்க அதிகமாக செயல்பட வேண்டி இருக்கும். இதனால், இயக்கத்திற்கான மிர்ஸா தேவை அதிகமாகும். எனவே, ஒவ்வொரு சீசனுக்கும் ஒரு முறையாவது ஏசியை சர்வீஸ் செய்ய வேண்டியது அவசியம்.

04.நீங்கள் சி உபயோகிக்கும் போது, மின்விசிறியையும் சேர்ந்து  பயன்படுத்தினால் அறை விரைவாக குளிர்ந்து விடும். எனவே, இது ஏசி இயந்திரத்தின் நேரத்தையும் மிச்சப்படுத்தும். குறைவான வேகத்தில் மின் விசிறியை இயக்கினால் நல்ல பயன் தரும். உங்களின் மின்சார கட்டணத்தையும் ஓரளவாவது குறைக்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Does AC increase your electricity bill Follow these tips


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->