25 வது திருமண நாள் - ஜோடியாக கேக் வெட்டி கொண்டாடிய அஜித்-ஷாலினி தம்பதியினர்.!  - Seithipunal
Seithipunal


தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகரான அஜித், நடிகை ஷாலினி இருவரும் முதன்முதலில் ஜோடியாக நடித்த படம் 'அமர்க்களம்'. சரண் இயக்கிய இந்த படப்பிடிப்பில் ஷாலினி காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தபோது அஜித் அவரை பாசத்துடன் பார்த்துக்கொண்டார்.

இதனால், ஷாலினிக்கு அஜித் மீது காதல் ஏற்பட்டதையடுத்து, கடந்த 2000-ம் ஆண்டில் பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இதற்கிடையே ஷாலினி நடித்த படம் அனைத்தும் 'ஹிட்' ஆகியதால், அவருக்கு பட வாய்ப்புகள் வழங்க ஏராளமான தயாரிப்பாளர்கள் காத்து கிடந்தனர். 

ஆனால், அவர் இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று அறிவித்தார். அதன் பின்னர் தனது பிள்ளைகளுடன் வீட்டைக் கவனித்துக்கொண்டு இருந்து வந்தார். இந்த நிலையில், அஜித்- ஷாலினிக்கு திருமணமாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை முன்னிட்டு இவர்கள் ஜோடியாக கேக் வெட்டி தங்களது 25-வது ஆண்டு திருமண நாளை கொண்டாடி மகிழ்ந்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ajith shalini couples celebrate 25 wedding anniversary


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->