விஜய் டிவியில் பாக்கியலட்சுமி எழிலுக்கு காதலியுடன் பிரேக்கப்பா.?! பரபரப்பில் சின்னத்திரை.! - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். குடும்பப் பெண்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த சீரியல் பல்வேறு அதிரடி திருப்பங்களுடன் ஒளிபரப்பாகும்.

இதில் ஹீரோவாக எழில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் விஷால். இவர் மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். கிடைக்கின்ற வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி சினிமாவில் நுழைய முயற்சித்து வருகிறார்.

இவரது சமூக வலைதள பக்கங்களில் விஷாலுக்கு நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது. இந்நிலையில் அவரது காதலி குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. அது வேறு யாருமில்லை ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரியா தான் என்று கூறப்படுகிறது. 

இவர்கள் இருவருமே நீண்ட நாட்களாக நட்பில் இருப்பவர்கள் என்றும், இருவரும் காதலித்து வருகிறார்கள் என்றும், தன் காதலிக்கு இந்த ராஜா ராணி 2 சீரியலில் நடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததே விஷால் தான் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது இருவருக்கும் பிரேக்கப் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், காரணம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bakyalakshmi vishal love may break up


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->