"டி.ராஜேந்தர் பூரண நலம்பெற வேண்டும்." பாரதிராஜா உருக்கம்.!
barathiraja about t rajenthiran
பிரபல நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சிம்பு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குனர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முக திறமை கொண்டவர் டி.ராஜேந்தர். உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் அவரது உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில், மேல் சிகிச்சைக்காக அவரை சிங்கப்பூர் அழைத்துச் செல்ல குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாக சமீபத்தில் சிம்பு அறிக்கை விடுத்தார்.
இந்நிலையில், இயக்குனரும், நடிகருமான பாரதிராஜா “டி.ராஜேந்தர் பூரண நலம்பெற்று தமிழுக்கும் தமிழ் திரைத்துறைக்கும் தொடர்ந்து
சேவையாற்ற இயற்கையை வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
English Summary
barathiraja about t rajenthiran