#Video: பாத்ரூம் போனா கூட தூக்கிட்டு தான் போவாங்கலாம்.! ஜி.பி.முத்துவுடன் ரகளை பண்ணும் BB டீம்.! - Seithipunal
Seithipunal


தற்போது பிக் பாஸ் சீசன் 5 சீசன்களை கடந்து ஆறாவது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர், பிக் பாஸ் 1 மற்றும் மூன்றாவது சீசனுக்கு பிறகு இந்த சீசன் பலரையும் பார்க்கும் விதமாக ஈர்த்துள்ளது என்று தான் கூற வேண்டும். 

அதற்கு காரணம் கலவையான போட்டியாளர்கள் இதில் இடம் பெற்றுள்ளனர். அத்துடன் ஜிபி முத்து போன்ற சிலரும் இடம் பெற்று இருப்பது ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் சமையல், பாத்ரூம் கிளீனிங், வீடு பராமரிப்பு என்று ஒவ்வொரு விஷயத்திற்கும் தனித்தனியே குழுக்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். 

தங்கள் குழுவை சிறந்த குழுவாக காட்டிக்கொள்ள அவர்களது துறையில் என்னென்ன பெர்ஃபார்மன்ஸ் கொடுக்க முடியுமோ அனைத்தையும் செய்கிறார்கள். 

அதன் ஒரு பகுதியாக வீட்டில் இருக்கும் ஹவுஸ்மேட்ஸ்க்கு பாத்ரூம் போக வேண்டும் என்றால் கூட அவர்களை வாரி அணைத்து தூக்கி,ரெட் கார்பெட் போட்டு அழைத்துச் செல்கின்றனர். அப்படி ஜி.பி.முத்துவை குழந்தை போல பாத்ரூமிற்கு அனைவரும் அழைத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bathroom Team special caring for Housemates in Biggboss 6 promo


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->