'Bazooka' ட்ரீட்க்கு தயாரா? ப்ரீ ரிலீஸ் டீசர் நாளை வெளியீடு...!!!- படக்குழு
Bazooka treat Pre release teaser released tomorrow Film crew
கேரளா நடிகர் 'மம்மூட்டி' நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து மம்மூட்டி `பசூக்கா' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் தீனோ டெனிஸ் இயக்கிய இப்படத்தில் கவுதம் வாசுதேவ் மேனன் ஒரு காவல் அதிகாரியாக நடித்துள்ளார்.
இவர்களுடன் திவ்யா பிள்ளை,சித்தார்த் பரதன்,ஹகிம், பாபு ஆண்டனி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.அதுமட்டுமின்றி இப்படத்தை சரிகமா, யூட்லீ பிலிம்ஸ் மற்றும் தியேட்டர் ஆஃப் டிரீம்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்தப் படத்தின் இசையை மிதுன் முகுந்தன் மேற்கொண்டுள்ளார். இது வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டிரெய்லரை படக்குழு அண்மையில் வெளியிட்டு ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
மேலும் படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கி வேகமாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் டீசரை நாளை காலை 10 மணிக்கு வெளியிடவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.இதனால் மம்முட்டி ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.
English Summary
Bazooka treat Pre release teaser released tomorrow Film crew