பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை திடீர் மரணம்! பெரும் அதிர்ச்சியில் ரசிகர்கள்! - Seithipunal
Seithipunal


பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை விஜயலட்சுமி திடீர் உடல்நலக் குறைவால் நேற்று காலை காலமானார்.

சரவணன் மீனாட்சி மற்றும் பாரதி கண்ணம்மா உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை விஜயலட்சுமி.

மேலும், 10க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் முக்கிய, குணசித்திர வேடங்களில் நடிகை விஜயலட்சுமி நடித்துள்ளார்.

அண்மைய காலமாக இவருக்கு ஏற்பட்ட சிறுநீரக பிரச்னை காரணமாக சிகிச்சைப் பெற்று வந்தார். 

சில நாள்களுக்கு முன்பு கழிவறையில் இருந்து வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டதாக சொல்லப்பட்டது.

சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நடிகை விஜயலட்சுமி, நேற்று முன் தினம் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.

இந்த நிலையில், தூக்கத்திலேயே நேற்று காலை நடிகை விஜயலட்சுமி உயிரிழந்துள்ளார். அவரின் மறைவுக்கு திரைவுலகினர், ரசிகர்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bharathi kannama Serial Actress Vijayalakshmi death


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->