கண்ணம்மாவுடன், கண்ணாமூச்சி ஆடும் பாரதி.! லக்ஷ்மியால் ஏற்பட்ட விபரீதம்.!  - Seithipunal
Seithipunal


தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த சீரியல்களில் முக்கியமானது பாரதிகண்ணம்மா. 9 வருடமாக பாரதியின் மொத்த குடும்பமும் மறைத்து வைத்திருந்த உண்மை லஷ்மிக்கு தெரிந்துவிட, ஹேமாவும்-லஷ்மியும் இனி பாரதியை அப்பா என்று தான் கூப்பிடுவோம் என்று கூறியுள்ளனர். 

இது ஒருபக்கம் கண்ணம்மாவுக்கு மிகப்பெரும் கவலையை அளித்துள்ளது. ஒருவேளை லஷ்மிக்கு பாரதி தான் தனது தந்தை என தெரிந்து விட்டதோ? என்று எண்ணி மிக கவலையுடன் உள்ளார். இதனைத்தொடர்ந்து தற்போது லஷ்மியும் அதற்கு ஏற்றாற்போல் பாரதி வீட்டில் தங்கியிருக்கிறார். 

மேலும் பாரதியுடன் விளையாடி பேசி தன்னுடைய ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்கிறாள். அத்துடன் பாரதியும், லட்சுமி தனது மகள் என அறியாமல் சாப்பாடு ஊட்டுவது, கதை சொல்வது மற்றும் முத்தம் தருவது என்று பாசமாக பார்த்துக் கொள்கிறார். 

இது ஒருபக்கம் கண்ணம்மாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், மற்றொருபுறம் கவலையளிக்கின்றது, திடீரென்று லக்ஷ்மி பாரதி வீட்டிற்கு சென்று தங்குவது, அப்பா என்று அழைப்பது அனைத்தும் லட்சுமிக்கு உண்மை தெரிந்து விட்டதோ? என்ற பதற்றத்தை கண்ணம்மாவிற்கு அளிக்கிறது. 

இதனை இப்படியே விடக்கூடாது என எண்ணிய  கண்ணம்மா பாரதியின் வீட்டிற்கு இரவு 12 மணி எனக்கூட பார்க்காமல் செல்கிறார். மேலும், லஷ்மி தூக்கத்திலேயே இருந்தாலும் அழைத்துச் செல்வேன் என்று பாரதியிடம் கூறுகிறார். இதனை கேட்டும் லட்சுமி தூங்குவது போல நடிக்கிறாள். 

கண்ணம்மா பேசுவதெல்லாம் கேட்ட  பாரதி கோபத்துடன் அவரை திட்டி வெளியே அனுப்புகிறார். லட்சுமிக்கு கண்ணம்மாவை பற்றிய கவலை இருந்தபோதிலும், பாரதியுடனே இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவளை கட்டிப்போடுகிறது. இன்றைய தின எபிசோட்  இக்கதைகளை மையமாகக் கொண்டே முடிவடைகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bharathi kannamma today episode march 29


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->