விரைவில் 'கம்பி' எண்ண போகிறார்களா பிக் பாஸ் பிரபலங்கள்.? சென்னை வழக்கறிஞரின் மிரட்டல் வீடியோ.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரையில்  நடிகைகளாக இருக்கும் லாஸ்லியா மரியனேசன் மற்றும் ஷிவானி நாராயணன் ஆகியோர் விரைவிலேயே சிறைக்குச் செல்வார்கள் என வழக்கறிஞர் ஒருவர் வீடியோ வெளியிட்டு இருப்பது திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கமல்ஹாசன் விஜய் டிவியில் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம்  புகழ்பெற்றவர்கள் லாஸ்லியா மற்றும் ஷிவானி. இவர்கள் இருவரும் தற்போது  சினிமா படங்களில் உன் சின்னத்திரையிலும் நடித்து வருகின்றனர். மேலும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களை பகிர்ந்து வருவதாக தெரிகிறது.

இது தொடர்பாக சென்னையைச் சார்ந்த வழக்கறிஞர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். இந்த வீடியோவில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக தமிழக அரசு சட்ட மசோதாவை ஏற்று இருப்பதாகவும் அந்தப் புதிய மசோதாவின் படி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு மூன்று மாத சிறை தண்டனையும் 500 ரூபாய் அபராதமும் ஆன்லைன் சூதாட்டத்தை நடத்துபவர்களுக்கு 10 லட்ச ரூபாய் அபராதம் மூன்று வருட சிறை தண்டையும் விதிக்கப்படும் என தெரிகிறது. இந்நிலையில் நடிகைகள் இருவரும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் சூதாட்டத்தை ஊக்குவித்து வருவதாக  அந்த வழக்கறிஞர் தனது வீடியோவின் மூலம் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

ஆன்லைன் சூதாட்டத்தின் காரணமாக லட்சக்கணக்கான இளைஞர்கள் தங்களது பொருளாதாரத்தையும் இழந்து  மத்தியில் நாளுக்கு நாள் தற்கொலை செய்து கொள்வதும் அதிகமாக இருந்தது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசு  ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக சட்ட மசோதாவை கொண்டு வந்தது. தற்போது அந்த மசோதா நிறைவேறி இருப்பது பொதுமக்கள் மத்தியில்  நிம்மதியை  ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bigg Boss celebs are going jail soon Chennai lawyer threatening video


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->