பிக்பாஸ் பூர்ணிமாவின் புதிய திரைப்படம் குறித்த அப்டேட்! - Seithipunal
Seithipunal


பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளராக இருக்கும் பூர்ணிமாவின் புதிய திரைப்படத்தின் அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. வேலூரில் பிறந்து வளர்ந்த பூர்ணிமா ரவி 'அராத்தி' யூடியூப் சேனல் மூலம் பிரபலமானவர். 

இவரது வீடியோக்களுக்கு இன்னும் பல ரசிகர்கள் உள்ளனர். இந்த சேனலுக்கு 27.7 லட்சம் சப்ஸ்கிரைப்பர்ஸ் இருக்கின்றனர். இவர் முதல் முதலில் கடந்த 2021 ஆம் ஆண்டு ரியோ ராஜ் நடிப்பில் வெளியான திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

பின்னர் நடிகை நயன்தாராவின் 75வது திரைப்படமான அன்னபூரணி திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் தற்போது தமிழில் வெளியாகும் பிக்பாஸ் சீசன் 7இல் பங்கேற்று வலுவான போட்டியாளராக உள்ளார். 

இந்நிலையில் நக்கலைட்ஸ் யூடியூப் சேனலில் புகழ்பெற்ற குழுவினரான ராஜேஸ்வர் காளிசாமி, பிரசன்னா பாலச்சந்திரன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள 'செவப்பி' திரைப்படத்தில் நடித்துள்ளார். 

இந்த திரைப்படத்தை எம்.எஸ். ராஜா இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தில் ரிஷிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆஹா தமிழ் ஓடிடியில் இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bigg Boss Poornima New Movie Update


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->