பிக் பாஸ் டைட்டில் வின்னர் இவரா? இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம் ! - Seithipunal
Seithipunal


விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஒன்பதாம் தேதி துவங்கியது. இந்த 6-வது சீசனையும் நடிகர் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகின்றார்.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியானது தற்போது 100 நாட்களை கடந்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது. இதில் இறுதி 5 போட்டியாளர்களாக அசீம், அமுதவாணன், மைனா நந்தினி, ஷிவின், விக்ரமன் ஆகியோர் நீடித்தனர். 

இதில் மைனா நந்தினி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் அமுதவாணன் பணப்பெட்டியுடன் வீட்டிலிருந்து வெளியேறினார். இறுதியாக அசீம், ஷிவின், விக்ரமன், உள்ளிட்ட மூன்று பேர் மட்டுமே தற்போது போட்டியாளர்களாக வீட்டிற்குள் இருக்கின்றனர்.

இதில் நேற்று நள்ளிரவில் ஒருவர் வெளியேறியதாக என்று தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி ஷிவின் வெளியேறியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிக் பாஸ் டைட்டில் வின்னராக அசீம் வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இது குறித்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bigg Boss season 6 title winner viral photo


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->