சிறுமி பாலியல் வன்கொடுமை: மூடி மறைக்க 10 லட்சம்.. விசிக கட்டப்பஞ்சாயத்து? சேலத்தில் அதிர்ச்சி!
Salem Mathur school girl harassment case vck
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே அரசு பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்கள் ரூபாய் 10 லட்சம் பேரம் பேசியதாக பரபரப்பு தகவல் ஒன்று பிரபல செய்தி ஊடகத்தில் வெளியாகி உள்ளது.
ஆத்தூர் அருகே அரசு பள்ளியில் பயின்று வரும் ஏழாம் வகுப்பு மாணவியை அதே பள்ளி சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவன் காதலிப்பதாக கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது.
இது குறித்து மாணவியரின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாக வெளியான தகவலை அறிந்த விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த சிலர், குற்றம் சாட்டப்பட்ட மாணவனின் பெற்றோரை அணுகி, இந்த விவகாரத்தையும் வெளியே வராமல் மூடி மறைப்பதற்காக 10 லட்சம் கேட்டதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் மாணவனின் பெற்றோர் இதற்கு உடன்படாத நிலையில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் 11ஆம் வகுப்பு மாணவனை கைது செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் மேலும் ஒரு அதிர்ச்சி தகவலாக இரண்டு மாணவர்கள் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டதாகவும், அதில் ஒரு மாணவன் ஆளுங்கட்சி பிரமுகரின் மகன் என்பதால் அவரை விடுவித்து உள்ளதாகவும் அந்த செய்தி நிறுவனத்தின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Salem Mathur school girl harassment case vck