பிக்பாஸ் சீசன் 7 கமல்ஹாசன் சம்பளம் எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் விஜய் டிவியில் ஏராளமான ரசிகர்களைக் கொண்ட நிகழ்ச்சி எனலாம். 

இதுவரை பிக் பாஸ் வெளியாகிய 6 சீசன்கள் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இதனை தொடர்ந்து 7வது சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. 

இந்நிலையில் தற்போது அடுத்த சீசன் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. பிக் பாஸுக்கு தான் 2017 ஆம் ஆண்டு முதல் விஜய் டிவியின் வெற்றிகரமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் முதலிடம் கிடைத்துள்ளது. 

இந்த நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் எப்போது துவங்கினாலும் அதன் டி.ஆர்.பி புதிய சிகரத்தை தொட்டுவிடும். அந்த வகையில் தற்போது 7வது சீசன் விரைவில் துவங்க உள்ளது. 

இந்த முறையும் இதனை கமல் தான் தொகுத்து வழங்க உள்ளார். ஏழாவது சீசனை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனுக்கு சம்பளமாக ரூ. 130 கோடி தர ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இவ்வளவு பெரிய சம்பளத்துக்கு விக்ரம் படத்தின் மிகப்பெரிய வெற்றி தான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bigg Boss Season 7 Kamal Haasan Salary


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->