நாகை-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து..மீண்டும் மீண்டும் ஒத்திவைப்பு..கரணம் என்ன?
Nagapattinam-Sri Lanka Passenger Ferry Repeated postponements What is Karanam?
நாகை-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக கப்பல் நிறுவனம் தெரிவித்தது.தொழில்நுட்ப அனுமதி கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு முதல் நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட்டு வந்தது,இதனிடையே இயக்கப்பட்டு வந்த பயணிகள் கப்பல் சேவை கடந்த நவ.18-ந்தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதையடுத்து கப்பல் சேவை ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கப்படும் என கப்பல் நிறுவனம் தெரிவித்து இருந்தது. ஆனால் வானிலை சீரடையாததால் கப்பல் போக்குவரத்து சேவையை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.இதனால் மீண்டும் கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், கப்பல் போக்குவரத்து பிப்.12இன்று முதல் தொடங்கும் என கப்பல் நிறுவனம் தெரிவித்து இருந்தது. ஆனால் தொழில்நுட்ப அனுமதி கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் கப்பல் சேவை தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது .
English Summary
Nagapattinam-Sri Lanka Passenger Ferry Repeated postponements What is Karanam?