மனைவியைக் கொன்று சடலத்துடன் தங்கி இருந்து கணவன்..திரிபுராவில் அதிர்ச்சி!
Husband kills wife and stays with dead body Shock in Tripura!
திரிபுராவில் குடும்ப தகராறில் மனைவியைக் கொன்று இரவு முழுவதும் சடலத்துடன் தங்கி இருந்து கணவன் மறுநாள் போலீஸ் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதையடுத்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
மேற்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ள அம்தாலி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்த்தவர் 40 வயதான ஷியாமல் தாசு,இவர் கடந்த திங்கட்கிழமை சம்பவத்தன்று இரவு மனைவி ஸ்வப்னாவுக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது .அப்போது இதில் ஆத்திரமடைந்த ஷியாமல் தாஸ் மனைவியை வீட்டில் இருந்த கூர்மையான ஆயுதத்தால் தாக்கியுள்ளார் என சொல்லப்படுகிறது . இதில் ஸ்வப்னா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்றும் இதை அடுத்து செய்வதறியாது ஷியாமல் இரவு முழுவதும் மனைவியின் சடலத்துடன் தங்கினார் என கூறப்படுகிறது.
![](https://img.seithipunal.com/media/kolko-nrcs7.jpg)
இந்தநிலையில் இதனை தொடர்ந்து நேற்று மதியம் மேற்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ள அம்தாலி காவல் நிலையத்திற்கு சென்ற ஷியாமல் தாஸ் நடந்த சம்பவத்தை போலீசாரிடம் கூறி சரணடைந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஸ்வப்னா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடும்ப தகராறில் மனைவியைக் கொன்று இரவு முழுவதும் சடலத்துடன் தங்கி இருந்து கணவன் மறுநாள் போலீஸ் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Husband kills wife and stays with dead body Shock in Tripura!