வாவ்.. அசத்தல் லிஸ்ட்.. பிக்பாஸ் வீட்டில் விறுவிறுப்பான போட்டியாளர்கள்.! முழு விவரம் இதோ.! - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து தெரியாதவர்களே இருக்க முடியாது. நகரம் முதல் கிராமம் வரை, முதியவர் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் தெரிந்த நிகழ்ச்சி தான் இந்த பிக்பாஸ்.

இதில், திரை துறையை சேர்ந்த பிரபலங்களை ஒரே வீட்டில் 100 நாட்கள் இருக்கவைத்து அவர்களுக்குள் ஏற்படும் அன்பு, காதல், கோபம் அனைத்தையும் படம்பிடித்து காட்டி சுவாரஸ்யத்தை ஏற்படுத்துவார்கள்.

அந்த வகையில், பிக்பாஸ் நிகழ்ச்சி 5 சீசன்களை கடந்து, தற்பொழுது 6 வது சீசனை எட்டியுள்ளது. நீண்ட நாட்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி 6- வது சீசன் குறித்த அறிவிப்பு எப்பொழுது வெளியாகும் என்று மக்கள் காத்துக் கொண்டிருந்தனர். 

இந்த நிலையில், பிக்பாஸ் 6 நாளை (அக்டொபர் 9 ஆம் தேதி) தொடங்கவுள்ள நிலையில், தற்போது வரை பிக்பாஸ் வீட்டிற்குள்  சென்றுள்ள போட்டியாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஜி.பி முத்து, அசீம், அசல் கோலார், ஷிவின் கணேசன், ராபர்ட் மாஸ்டர், ஷெரினா, ராம ராமசாமி, ஆர்யன் தினேஷ், ஜனனி, அமுதவானன், மஹேஷ்வரி, கதிர்,நடிகை ஆயிஷா.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Biggboss 6 contestants in Bb house


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->