விடைபெற்றார் ஜி.பி.முத்து.. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றம்.?!  - Seithipunal
Seithipunal


தமிழில் ஒளிபரப்பு செய்யப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது. இதனால், தான் பிக் பாஸ் சீசன் 5 முடிந்து, 6வது சீசன் வரை வந்துள்ளது. எப்போது 6 வது சீசன் ஆரம்பிக்கும் என்று காத்திருந்த நிலையில், அக்டோபர் 9ம் தேதி பிக் பாஸ் தொடங்கியது. 

பிக்பாஸில் முதல் போட்டியாளராக நுழைந்த ஜிபி முத்துவை வந்த நாள் முதலே கமல் முதற்கொண்டு அனைத்து போட்டியாளர்களும் அவரை கலாய்த்து வருகின்றனர். 

அவரது வெகுளித்தனமான பேச்சு ரசிகர்களை கவர்கிறது. இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஜி.பி.முத்துவின் ஒவ்வொரு செயல்பாடும் ரசிகர்களை கவரும் விதமாக இருக்கிறது.

இத்தகைய சூழலில், ஜி.பி.முத்து தனது குடும்பத்தை பார்க்க வேண்டும் என்று வீட்டில் அழுது புலம்பி என்னை வெளியில் விடுங்கள். இந்த வீட்டில் இருக்க முடியாது என்று கதறினார். அவரை கமல்ஹாசன் சமாதானம் செய்தார். பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் ஜி.பி.முத்துவை தான் அனைவருக்கும் பிடிக்கும்.

அவர் வெளியேறிவிட்டால் நிகழ்ச்சியில் சுவாரசியம் குறைந்து விடும் என்பதால் பிக் பாஸ் எவ்வளவோ சமாதானம் செய்தார். ஆனால், மீண்டும் ஜி.பி.முத்து அடம்பிடித்த நிலையில் பிக்பாஸ் அவரை வீட்டிற்கு வெளியே வரும்படி அழைக்கிறார். இந்த ப்ரோமோ வீடீயோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Biggboss 6 GP Muthu may Leave


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->