அதை மட்டும் செய்யவே கூடாது.. பிக் பாஸ் 6-க்காக விஜய் டிவி எடுத்த அதிரடி முடிவு.!  - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மிகப் பிரபலமான நிகழ்ச்சியாக பிக் பாஸ் இருக்கிறது. இந்தி, கன்னடம் என்று பல மொழிகளில் இருக்கும் பிக் பாஸ் தமிழிலும் ஒளிபரப்பு செய்யபடுகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது. 

நான் பிக்பாஸ் செல்ல இயலாது..!! காரணத்தை வெளியிட்டார் ஜி.பி. முத்து..!! -  Seithipunal

இதுவரை 5 சீசன்கள் முடிவடைந்து இருந்தாலும் கூட முதல் மூன்று சீசனங்களில் இருந்த வரவேற்பு அடுத்தடுத்த சீசன்களில் இல்லை. இதற்கு காரணம், போட்டியாளர்களிடம் சுவாரஸ்யம் இல்லை என்பதுதான். பிக் பாஸ் 4 மற்றும் ஐந்தில் போட்டியாளர்களை பிக் பாஸ் சரிவர தேர்ந்தெடுக்கவில்லை. 

இது பலராலும் வெளிப்படையாக கூறப்பட்ட குற்றச்சாட்டு. எனவே, இந்த சீசனில் அந்த தவறை தப்பி தவறி கூட செய்து விடக்கூடாது என்பதில் விஜய் டிவி கவனமாக இருக்கிறதாம். எனவே, இதற்காக போட்டியாளர்களை தேடி தேடி பட்டியல் தயாரித்துள்ளதாக கூறப்படுகிறது. 

வேட்டைக்கு ரெடியா?

கடந்த ஐந்தாவது சீசனில் சில போட்டியாளர்கள் கடைசி நேரத்தில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் ஒதுக்கப்பட்டார்கள். ஆனால், அவர்கள் எல்லோருமே சமூக வலைதளங்களில் மிகவும் பரபரப்பான நபர்கள் தான். அவர்களை இந்த சீசனில் பங்கேற்க வைத்திருந்தால், பிக் பாஸ் சூப்பராக இருந்திருக்கும் என்பது ரசிகர்கள் கருத்தாக இருந்தது. 

இதை பிக் பாஸ் குழு கவனிக்க தவறவில்லை. எனவே, அந்த போட்டியாளர்களை ஆறாவது சீசனில் இணைத்து டிஆர்பி-ஐ டாப்பில் கொண்டு வர வேண்டும் என்று விஜய் டிவி திட்டம் தீட்டியுள்ளதாம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

biggboss 6 make evil plan to make high trp rating


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->