பிக்பாஸ் வீட்டில் கதறி கதறி அழுத பெண் போட்டியாளர்.! ரசிகர்கள் அதிர்ச்சி.!  - Seithipunal
Seithipunal


தமிழில் ஒளிபரப்பு செய்யப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது. இதனால், தான் பிக் பாஸ் சீசன் 5 முடிந்து, 6வது சீசன் வரை வந்துள்ளது. 6 வது சீசன் வரும் அக்டோபர் 9ம் தேதி தொடங்கியது. 

20 போட்டியாளர்களுடன் துவங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே நிறைய சண்டை சச்சரவுகள் இருந்து வருகின்றன. இதில் 21ஆவது போட்டியாளராக மைனா நந்தினி உள்ளே நுழைந்தார். இதன் பின்னர் பிக் பாஸ் வீட்டில் அனைவருக்கும் பிடித்த நபராக இருந்த ஜி.பி.முத்து தானாகவே வெளியேறினார். 

தனது குடும்பத்தை பிரிந்து தன்னால் இருக்க முடியவில்லை என்று கூறிவிட்டு அவர் வெளியேறிய நிலையில் சாந்தி, அசல் கோளார், ஷெரீனா உள்ளிட்டோர் அடுத்தடுத்த வாரங்களில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்கள். 

இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து மகேஸ்வரி வெளியேறினார். இத்தகைய நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள தனலட்சுமியை கமலஹாசன் சனி, ஞாயிறு இரு நாட்களும் பயங்கரமாக கண்டித்தார். 

அத்துடன் அவர் விளையாட்டில் வாங்கிய பட்டத்தை பறித்து விக்ரமனுக்கு கொடுத்தார். இது தனக்கு மிகப்பெரிய அவமானமாக இருப்பதாக தனலட்சுமி தேம்பித் தேம்பி அழுதுள்ளார். பிக் பாஸ் வீட்டிற்குள் அவர் கதறி அழுதுள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

biggboss dhanalakshmi crying


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->