ஹீரோவாக அறிமுகமாகும் பிக்பாஸ்-5 டைட்டில் வின்னர்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


பிக் பாஸ் டைட்டில் வின்னர் ராஜு புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ராஜூ ஜெயமோகன். அதுமட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிறைய நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

அந்த வகையில் சமீபத்தில் ஒளிபரப்பான பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டில் வின்னர் ஆனார். இதனையடுத்து தற்போது புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா உள்ளிட்ட படங்களை இயக்கிய, இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் ஹீரோயினாக பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இத்திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என  எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Biggboss title winner Raju Jayamohan introduce hero


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->