பிக்பாஸ் 6 -ல் கன்பார்ம் செய்யப்பட்ட 3 நடிகைகள்.! வைரலாகும் விவரம் இதோ.! - Seithipunal
Seithipunal


பிக் பாஸ் ஆறாவது சீசனில் கலந்து கொள்ள போகும் மூன்று நடிகைகள் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

இந்தியாவில் மிகப் பிரபலமான நிகழ்ச்சியாக பிக் பாஸ் இருக்கிறது. இந்தி, கன்னடம் என்று பல மொழிகளில் இருக்கும் பிக் பாஸ் தமிழிலும் ஒளிபரப்பு செய்யபடுகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது. 

இதுவரை 5 சீசன்கள் முடிவடைந்து இருந்தாலும் கூட முதல் மூன்று சீசனங்களில் இருந்த வரவேற்பு அடுத்தடுத்த சீசன்களில் இல்லை. இதற்கு காரணம், போட்டியாளர்களிடம் சுவாரஸ்யம் இல்லை என்பதுதான். பிக் பாஸ் 4 மற்றும் ஐந்தில் போட்டியாளர்களை பிக் பாஸ் சரிவர தேர்ந்தெடுக்கவில்லை. 

இது பலராலும் வெளிப்படையாக கூறப்பட்ட குற்றச்சாட்டு. எனவே, இந்த சீசனில் அந்த தவறை தப்பி தவறி கூட செய்து விடக்கூடாது என்பதில் விஜய் டிவி கவனமாக இருக்கிறதாம். எனவே, இதற்காக போட்டியாளர்களை தேடி தேடி பட்டியல் தயாரித்துள்ளதாக கூறப்படுகிறது. 

முதற்கட்டமாக விஜய் டிவியின் ராஜா ராணி 2 சீரியல் இருந்து விலகிய அர்ச்சனா மற்றும் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, ஆதலால் காதல் செய்வீர் படத்தில் நடித்து பிரபலமடைந்த நடிகை மனிஷா யாதவ் ஆகிய மூன்று பேர் பிக் பாஸில் இருப்பது உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

biggboss 6 contestants 3 details are may be confirmed 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->