''பில்லா'' ரீ ரிலீஸ் தேதி அப்டேட்!
Billa rerelease date update
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ''பில்லா''. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பில்லா 2 என்ற திரைப்படம் வெளியானது.
ஆனால் 'பில்லா 2' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இந்நிலையில் தயாரிப்பு நிறுவனம் பில்லா திரைப்படத்தை மறு வெளியீடு செய்வதாக திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் வருகின்ற பிப்ரவரி 23ஆம் தேதி பில்லா திரைப்படத்தை வெளியிடுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்திலும் எதிர்பார்ப்பிலும் உள்ளனர்.
English Summary
Billa rerelease date update