கடைசிவரை போராடி ராஜஸ்தானிடம் வீழ்ந்த சென்னை அணி..!
Rajasthan won its first win by defeating Chennai
ஐபிஎல் தொடரில் சென்னை அணி - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையிலான லீக் போட்டி இன்று கவுகாத்தியில் நடந்தது. போட்டியில் சென்னை அணிக்கு எதிராக முதலில் ராஜஸ்தான் அணி பேட் செய்ததில் 182 ரன்களை எடுத்தது.
183 ரன்கள் என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. சென்னை அணிக்காக தொடக்க ஆட்டக்காரர்களாக ரச்சின் ரவீந்திரா - ராகுல் திரிபாதி களமிறங்கினர். சென்னை அணிக்காக கடந்த 02 போட்டியிலும் சிறப்பாக ஆடி ரவீந்திரா முதல் ஓவரிலே ஆர்ச்சரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.

ராகுல் திரிபாதி ஹசரங்கா சுழலில் 19 பந்துகளில் 03 பவுண்டரி 01 சிக்ஸருடன் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷிவம் துபேவை 10 பந்துகளில் 01 பவுண்டரி 02 சிக்ஸருடன் 18 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய விஜய் சங்கர் 01 சிக்ஸருடன் 09 ரன் எடுத்த நிலையில் ஹசரங்கா பந்தில் போல்டானார்.
தொடர்ந்து நிதானமாக ஆடிய ருதுராஜ் 44 பந்துகளில் 07 பவுண்டரி 01 சிக்ஸருடன் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து, தோனி களமிறங்கினார். கடைசி 12 பந்துகளில் 39 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தேஷ்பாண்டே வீசிய அந்த 19-வது ஓவரில் தோனி ஒரு சிக்ஸரும், பவுண்டரியும் விளாசினார். அந்த ஓவரின் கடைசி பந்தில் ஜடேஜாவும் ஒரு சிக்ஸர் விளாசினார். இதனால், கடைசி 06 பந்தில் 20 ரன்கள் தேவைப்பட்டது.

முதல் பந்து சந்தீப் சர்மா வீசிய பந்து ஒயிடாக மாற, மீண்டும் வீசப்பட்ட முதல் பந்தை தோனி சிக்ஸர் அடிக்க முயற்சித்து 11 பந்தில் 16 ரன்கள் எடுத்து அவுட்டானார். பின்னர் கடைசி 03 பந்தில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஜேமி ஓவர்டன் சிக்ஸர் அடிக்க 02 பந்தில் 11 ரன்கள் தேவைப்பட்டது.
ஆனால், 05-வது பந்தில் 02 ரன்கள் மட்டுமே கிடைத்தது. கடைசி பந்தில் 09 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 02 ரன்கள் மட்டுமே சென்னை எடுத்தது. இதன்மூலம் ராஜஸ்தான் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தொடரில் ஆர்ஆர்-க்கு முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
English Summary
Rajasthan won its first win by defeating Chennai