'பொதுமக்களை ஒரு தடவை கூட சந்திக்கவில்லை, ஆனால், திமுக எதிரி என்று சொல்கிறார்'; விஜய்யை விமர்ச்சித்த அமைச்சர் கே.என்.நேரு..!
I have not met the public even once but they say that DMK is the enemy Minister KN Nehru criticized Vijay
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம், சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றியிருந்தார். அப்போ அவர், "2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு இதுவரை சந்திக்காத ஒரு வித்தியாசமான தேர்தலை சந்திக்கும். இரண்டே இரண்டு பேருக்கு நடுவில் தான் போட்டியே. ஒன்று த.வெ.க. இன்னொன்று தி.மு.க." என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், விஜய்யின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் கே.என்.நேரு, திருச்சியில் நடைபெற்ற முதலமைச்சர் பிறந்தநாள் வாழ்த்தரங்கத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;

''நேற்று வரை நடிகராக இருந்தவர், அரசியலுக்கு வந்து பொதுமக்களை ஒருமுறை கூட சந்திக்காதவர், கூட்டரங்கத்தில் கூட்டத்தை கூட்டிக் கொண்டு எங்களுக்கு தி.மு.க.தான் முக்கிய எதிரி என்று கூறுகிறார். அவரையும் தி.மு.க. சந்திக்கும். 2026-இல் மு.க.ஸ்டாலின் தான் மீண்டும் முதலமைச்சராக வருவார் என்று குறிப்பிட்டார்.
அத்துடன் அவர், முதலமைச்சர் அமைதியாக இருந்தாலும், அனைத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார். மத்தியில் இருப்பவர்கள் தி.மு.க.வை அகற்ற வேண்டும் என்று கூறி வருகிறார்கள். ஆனால், அவர்களால் தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை என்று தெரிவித்தார்.

அத்துடன், மறுபுறம், பா.ஜ.க.வுடன் சேரமாட்டோம் என்று சொன்னவர்கள் இப்போது ஓடிச் சென்று அவர்களுடன் சேர்கிறார்கள் என்றும், அனைவரையும் சந்திக்க தி.மு.க.வினர் ஆயத்தமாக இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
I have not met the public even once but they say that DMK is the enemy Minister KN Nehru criticized Vijay