ராஜஸ்தான் மற்றும் பீகார் மாநிலங்களின் உதய நாள் விழா.. புதுச்சேரி துணைநிலை ஆளுநர் சரவெடி பேச்சு!  - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலம் கல்வி மற்றும் நிர்வாகத்தின் மையமாக இருந்து வருகிறது. நாட்டின் அறிவு மற்றும் ஆன்மீக வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்துள்ளது என ராஜஸ்தான் மற்றும் பீகார் மாநிலங்களின் உதய நாள் விழாவில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர்  கைலாஷ்நாதன் கூறினார். 

ராஜஸ்தான் மற்றும் பீகார் மாநிலங்களின் உதய நாள் விழா ஆளுநர் மாளிகையில் இன்று கண்டுப்பிடிக்கப்பட்டது. துணைநிலை ஆளுநர்  கைலாஷ்நாதன் சிறப்பு விருந்தினராக விழாவில் பங்கேற்றார். தலைமைச் செயலர் சரத் சௌகான், உயர் கல்வித்துறை இயக்குனர் அமன் சர்மா, தகவல் தொழில்நுட்பத்துறை இயக்குனர் சிவ்ராஜ் மீனா, பயிற்சி ஐபிஎஸ் அதிகாரி சிவம், புதுச்சேரியில் வாழும் ராஜஸ்தான் மற்றும் பீகார் சமூகங்களின் பிரதிநிதிகள், புதுச்சேரி கல்வி நிறுவனங்களில் பயிலும் ராஜஸ்தான், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

இரண்டு மாநிலங்களின் கலை,  பண்பாடு, வரலாறு ஆகியவற்றை எடுத்துக்காட்டும் உரைகளும், கலை நிகழ்ச்சிகளும் நிகழ்த்தப்பட்டன. விழாவில் துணைநிலை ஆளுநர் ஆற்றிய உரையின் சுருக்கம்.
மாநிலங்களின் உதய நாள் கொண்டாட்ங்கள், ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் நம்முடைய பன்முகப்பட்ட கலாச்சார தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பாக அமைகிறது. இந்த சித்தாந்தத்தை தந்த நம்முடைய பாரத பிரதமருக்கு நாம் நன்றியை தெரிவித்துக் கொள்ள வேண்டும்.

பீகார் மாநிலம் கல்வி மற்றும் நிர்வாகத்தின் மையமாக இருந்து வருகிறது. நாட்டின் அறிவு மற்றும் ஆன்மீக வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்துள்ளது. அதே சமயம் ராஜஸ்தான், நிர்வாக அமைப்பு மற்றும் வணிக செழிப்புக்கு பிரபலமானது. சுற்றுலாத் துறையில் ராஜஸ்தானிடம் இருந்து நாம் நிறைய கற்றுக் கொள்கிறோம். பாலைவனங்களையும் கோட்டைகளையும் உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக மாற்ற முடியும் என்பதை ராஜஸ்தான் காட்டி இருக்கிறது.

புலம் பெயர்ந்த மக்களிடம் நாம் காணும் மிக அற்புதமான பண்பு. அவர்கள் புலம்பெயர்ந்த பிறகும் தங்கள் மாநிலங்களை நேசிப்பது தான். இத்தகைய விழாக்கள், பல்வேறு மாநிலங்களுக்கு இடையிலான பரஸ்பர உறவுகளை நமது தேசிய ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துகின்றன. நமது மரபுகளும் மொழிகளும் வேறுபட்டு இருக்கலாம். ஆனால் நாட்டின் வளர்ச்சியை நோக்கி நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணித்துக்  கொண்டு இருக்கிறோம். ஒவ்வொரு மாநிலத்தின் பங்களிப்போடும் நான் 2047 ஆம் ஆண்டு வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற கனவை நனவாக்க வேண்டும்.

பீகார் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களை சேர்ந்த மக்கள் இங்கு வாசிப்பதால் புதுச்சேரி நிறைய பயனடைந்து இருக்கிறது. உங்களுடைய பங்களிப்பிற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். புதுச்சேரியின் பன்முகத்தன்மையை அதன் கலாச்சார செழுமையை இது மேம்படுத்தி உள்ளது. 

சப்கா சாத், சப்கா விகாஸ் சப்கா விஷ்வாஸ் சப்கா பிரயாஸ்" -  என்பது வெறும் முழக்கம் மட்டுமல்ல. அது நம்முடைய அரசின் அடிப்படைக் கொள்கை. மாண்புமிகு பாரதப் பிரதமரின் தலைமையில் சமத்துவமான, வளமான இந்தியாவை உருவாக்க நாம் தொடர்ந்து பாடுபடுவோம். ஒன்றிணைந்து முன்னேறுவோம் என துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rajasthan and Bihar Rise Day Celebrations Puducherry Lieutenant Governor


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->