சின்னத்திரை நடிகரின் கால்களை உடைத்த வழக்கில் பாஜக நிர்வாகி கைது.! - Seithipunal
Seithipunal


சின்னத்திரை நடிகரின் கால்களை உடைத்த வழக்கில் பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

அசத்தப்போவது யாரு, கலக்கப்போவது யாரு உள்ளிட்ட சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டே பிரபலமானவர் வெங்கடேசன். மதுரை சேர்ந்த இவர் விளம்பர படங்களை எடுத்தல் மற்றும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து கொடுப்பது உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறார்.

இதனிடையே இவருக்கும், இவரது மனைவிக்கும் இடைய ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதில் வெங்கடேசனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக மனைவி பானுமதி குற்றம் சாட்டி இருந்தார்.

இந்த நிலையில் வெங்கடேசன் வீட்டில் ஓட்டுனராக பணியாற்றும் மோகன் என்பவரிடம் பானுமதி வெங்கடேசனின் காலை உடைக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக ராஜ்குமார் என்பவரை மோகன் அறிமுகம் செய்து வைத்துள்ளார். ஒரு லட்சம் ரூபாய் ராஜ்குமார் கேட்டதால் இந்தத் திட்டத்தை பானுமதி கைவிட்டுள்ளார். 

இதனையடுத்து பாஜகவை சேர்ந்த வைரமுத்து என்ற தனது உறவினரை தொடர்பு கொண்டு கணவரின் நடத்தை குறித்து தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து வைரமுத்து கடந்த ஜூன் மாதம் 11-ம் தேதி வெங்கடேசனை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார். 

இதில் வெங்கடேசன் 2 கால்களும் உடைந்தது. இதனையடுத்து வெங்கடேசன் தரப்பில் அளித்த புகார் அடிப்படையில் அவரது மனைவி பானுமதி, ராஜ்குமார், மோகன், வைரமுத்து, ஆனந்தராஜ், மலைச்சாமி ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP admin attack Tv show actor Venkatesan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->