பொங்கல் நேரத்தில் இப்படி அடாவடியாக, அராஜகமாக செயல்படுவதா? பொன்முடியை அமைச்சரவையிலிருந்து நீக்குங்க!
BJP Narayanan condemn to DMK Govt ponmudi issue
பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் இருவேல்பட்டு பகுதியில் கடந்த மாதம் வெல்ல அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய நிகழ்வையடுத்து ஒரு மாதம் கழித்து காவல் துறையினர் அந்த இடத்திற்கு சென்று அங்குள்ள மக்களை துன்புறுத்தி, மிரட்டி, தாக்குவது கடும் கண்டனத்திற்குரியது.
தமிழகத்தின் அலங்கோல ஆட்சியை திருத்திக் கொள்ள முடியாமல் போலிஸ் ராஜ்ஜியம் நடத்துவது சர்வாதிகாரத்தின் உச்சக்கட்டம். ஃபாஸிஸத்தின் உண்மை முகம்.
குறிப்பாக பெண்களை ஆண் போலீஸார் கையை பிடித்து இழுப்பது, ஜீப்பில் தள்ளுவது போன்ற மனித உரிமைகள் மீறிய செயலை செயல்படுத்துவது அமைச்சர் பொன்முடியின் ஆணவப்போக்கை வெளிப்படுத்துகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் குறுநில மன்னர் போல் அமைச்சர் பொன்முடி செயல்படுவது இந்த ஆட்சிக்கு அடிக்கப்படும் இறுதி மணி என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உணர வேண்டும்.
பொங்கல் பண்டிகை கொண்டாடிக்கொண்டிருக்கிற இந்த நேரத்தில், அடாவடியாக, அராஜகமாக செயல்படுவது முறையானதல்ல. உடனடியாக, அப்பாவிகள் மீதான இந்த தாக்குதல் நடவடிக்கையை நிறுத்துவதோடு, இதற்கு காரணமான காவல் துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியதோடு, அவர்களை ஏவி விட்ட அமைச்சர் பொன்முடியை அமைச்சரவையிலிருந்து பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
English Summary
BJP Narayanan condemn to DMK Govt ponmudi issue