நான் இந்து குடும்பத்தில் பிறந்து..முஸ்லீம் குடும்பத்தில் வளர்ந்து..கிறிஸ்துவ குடும்பத்தில் பெண் எடுத்தவன் - இயக்குனர் மிஸ்கின்!! - Seithipunal
Seithipunal


சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் மிஸ்கின். இவர் சமீபத்தில் நடந்த இயக்குனர் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா ஹீரோவாக அறிமுகமாகும் படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இயக்குனர் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா நடிக்கும் படத்திற்கு ஹிட்லிஸ்ட் என்று பெயரிடப்பட்டுள்ளது. அத்திரைப்படத்தை கே.எஸ் ரவிக்குமார் தயாரித்துள்ளார்.

படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழாவில் இயக்குனர் மிஸ்கின் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், கோவிலுக்கு போகாதீங்க சினிமாக்கு போங்கனு நான் சொன்னது பெரிய சர்ச்சை ஆகிவிட்டது. நான் கோவில்னு சொன்னது கோவிலை மட்டுமில்ல சர்ச்சையும் மசூதியையும்தான். ஏன் கோவிலுக்கு போகாதீங்க திரையரங்க போங்கன்னு சொன்னேன் என்றால், திரையரங்கள் எல்லாம் வெறிசோடி காணப்படுகிறது. எல்லாரோட வாழ்க்கையும் ஒரு செல்லுக்குள்ளே முடிந்து விடுகிறது.

நான் இந்து குடும்பத்தில் பிறந்தவன். முஸ்லீம் குடும்பத்தில் வளர்ந்தவன். கல்யாணம் செய்துள்ளது கிருஸ்துவ குடும்பம். 10 நிமிட பேச்சில் அனைத்தையும் விளக்கிவிட முடியாது. கோவில், சர்ச், மசூதிக்கு செல்லுங்கள். தியேட்டர்க்கு அடிக்கடி செல்லுங்கள் என்று பேசினார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Born Hindu family Director miskin


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->