முதலமைச்சருக்கு நன்றி சொன்ன தனுஷ் படக்குழு: ஏன் தெரியுமா? - Seithipunal
Seithipunal


அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. இந்த திரைப்படம் வருகின்ற 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா, சுமேஷ் மூர், சிவராஜ் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

தணிக்கை குழு யூ/ஏ சான்றிதழ் வழங்கியுள்ள இந்த திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் பட குழு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளது. 

அதில், 'கேப்டன் மில்லர்' படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கியதற்கு தமிழ்நாடு அரசிற்கு நாங்கள் மிகவும் தாழ்மையுடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

captain miller crew thanked CM


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->