நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்..மதுபிரியர்கள் அதிர்ச்சி!
Tasmac shops to be closed tomorrow Wine lovers are shocked
உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நாளை நடைபெறுவதையொட்டி அந்த பகுதியில் இயங்கி வரும் மதுபானக் கடைகள் அடைக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் அறிவிப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அம்மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், அலங்காநல்லூர் பகுதியில் எதிர்வரும் 16.01.2025 அன்று ஜல்லிக்கட்டு விழா நடைபெறுதையொட்டி அப்பகுதியில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொருட்டு அலங்காநல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மாநில வாணிய கழக மதுபான சில்லரை விற்பனை கடைகள் (FL-1) மற்றும் மனமகிழ் மன்றங்களை (FL-2) 16.01.2025 ஒரு நாள் மட்டும் மூடப்பட்டு இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.மேலும் மேற்படி தினத்தில் மதுபான சில்லரை விற்பனை எதுவும் நடைபெறாது என தெரிவிக்கப்படுகிறதுஎன்று மாவட்ட கலெக்டர் அறிவிப்பு தெரிவித்துள்ளார்.இவ்வாறு மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Tasmac shops to be closed tomorrow Wine lovers are shocked