தனுஷ் ரசிகர்களே ரெடியா.. "தரமான சம்பவம் காத்திருக்கு".. படக்குழு கொடுத்த அப்டேட்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது சாணி காயிதம், ராக்கி ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தில் சந்திப் கிஷன், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கன், கன்னட நடிகர் சிவராஜ்குமார் ஆகியோர் நடிக்கின்றனர்.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஜூலை 28ம் தேதி சம்பவம் இருக்கு.. கில்லர் கில்லர்" என பதிவிட்டுள்ளார்.

அதன்படி தனுஷின் பிறந்த நாளான ஜூலை 28ஆம் தேதி கேப்டன் மில்லர் படத்தின் டீஸர் அல்லது ட்ரெய்லர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Captain Miller movie Update on July 28


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->