''கேப்டன் மில்லர்'' ஓடிடி ரிலீஸ் அப்டேட்: உற்சாகத்தில் ரசிகர்கள்! - Seithipunal
Seithipunal


அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ''கேப்டன் மில்லர்''. ஆக்சன் பாணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் கடந்த கடந்த ஜனவரி 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 

ஆலய நுழைவு போராட்டம், அதிகாரத்திற்கு எதிரான புரட்சி என உருவான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் முதல் நாளில் ரூ. 17 கோடி வசூலித்ததாக தகவல் வெளியானது. 

இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படம் தெலுங்கில் வெளியானது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ரூ. 50 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் ஒட்டுமொத்தமாக ரூ. 105 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்நிலையில் அமேசான் பிரைமில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளில் பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Captain Miller OTT Release Update


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->