'நா ரெடி' போதை பாடலுக்கு ஆப்பு! சென்சார் போர்டின் அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் லியோ படத்தில் ஹீரோவாக நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் கூடிய விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு "லியோ" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்ட நிலையில் "நா ரெடி" என தொடங்கும் லியோ படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டது.

நடிகர் விஜய் விஜய் சிகரெட் பிடிப்பது போன்றும், நடன கலைஞர்கள் கையில் மது கோப்பைகளுடனும் இந்த பாடலில் இடம்பெற்று இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனால் பல சமூக ஆர்வலர்கள் விஜய்க்கு எதிரான கருத்துக்களை முன்வைக்க தொடங்கினர்.

இந்த நிலையில் லியோ படத்தின் நா ரெடி பாடல் குறித்து மத்திய திரைப்பட தணிக்கை குழுவுக்கு சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் லியோ படத்தின் நா ரெடி பாடலில் முக்கிய திருத்தங்களை மேற்கொள்ள மத்திய திரைப்பட தணிக்கை குழு அறிவுறுத்தியுள்ளது 

அதன்படி ஹீரோ  க்ளோசப் ஷார்ட்ஸ் பாடல்களில் எங்கு காட்டப்படுகிறாரோ அந்த இடத்தில் புகைப்பிடிக்கும் காட்சியை நீக்க வேண்டும். புகைப்பிடித்தல் எச்சரிக்கை வாசகம் எழுத்தும் அளவை அதிகரித்து விதிமுறைகளின்படி வைத்திருக்க வேண்டும்.

புகைப்பிடிப்பு பிடித்தல் எச்சரிக்கை வாசகம் தெளிவாகவும் படிக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும் மற்றும் வெள்ளை பின்னணியில் கருப்பு நிறத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அதேபோன்று பாடலில் இடம்பெற்றுள்ள "பத்தாவது பாட்டில நான் குடிக்க அண்டாவ கொண்டா சேர்ஸ் அடிக்க, புகையிலை புகையில பவர் இருக்கு, மில்லி உள்ள போனா போதும் கில்லி வெளிய வருவான்டா" ஆகிய வரிகளை அந்த பாடலில் இருந்து நீக்க வேண்டும் எனவும் மத்திய திரைப்பட தணிக்கை குழு உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CBFC has ordered make revision in Naa ready song from Leo


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->