ராமோஜி ராவ் மறைவு - திரைப் பிரபலங்கள் இரங்கல்! - Seithipunal
Seithipunal



ராமோஜி ராவ் பிலிம் சிட்டி நிறுவனரும், ராமோஜி குழும நிறுவனங்களின் தலைவருமான ராமோஜி ராவ் தனது 87வது வயதில் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் காலமானார். இவர் ஈநாடு என்ற பத்திரிகையையும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

ராமோஜி ராவ் உடல்நலக் குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இவர் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 3.45 மணிக்கு மருத்துவமனையில் காலமானார்.

இந்நிலையில் இவரது மறைவுக்கு ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் தளத்தில், "எனது வழிகாட்டியான ராமோஜி ராவின் மரணம் எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. அனைத்து துறைகளிலும் அவர் ஒரு கிங் மேக்கராக திகழ்ந்தவர். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்" என்று கூறியுள்ளார். 

தெலுங்கு நடிகரும், ஜன சேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அவர் கூறுகையில், "நான் பதவியேற்பு விழாவிற்கு பிறகு ராமோஜி ராவை சந்தித்து ஆசி பெற விரும்பினேன். இந்நிலையில் இவரது மரணம் எனக்கு அதிர்ச்சியளிக்கிறது" என்று கூறியுள்ளார்.

மேலும் நேரில் சென்று ராமோஜி ராவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, "அவர் பெரிய மனிதராக இருக்கலாம். ஆனால் நான் அவரிடத்தில் ஒரு குழந்தையை தான் பார்த்தேன். அவரது கனவுகளை அவரது வாரிசுகள் முன்னெடுத்துச் செல்வார்கள் என்று நம்புகிறேன். தெலுங்கு மக்கள் ஒரு சிறந்த மனிதரை இழந்துள்ளனர்" என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Celebrities Paying Condolences For Ramoji Rao Death


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->