ஒருவர் கூட வாய் திறப்பதில்லை - சிங்காரச் சென்னை என்னாகுமோ? - இயக்குனர் தங்கர் பச்சான் ஆதங்கம்! - Seithipunal
Seithipunal


தீபாவளி பண்டிகை, மழை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் சென்னையில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

மேலும், மெட்ரோ ரயில் திட்ட பணி காரணமாகவும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தீபாவளி பண்டிகை முன்னிட்டு பல்வேறு பகுதியில் போக்குவரத்து மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கு செல்ல ஐந்து இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துக்குள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இயக்குனர் தங்கர் பச்சான், சென்னையில் உள்ள எனது அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு 6.5 கி.மீ வந்தடைய 110 நிமிடங்கள் ஆனது என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

இதுகுறித்த அவரின் டிவிட்டர் செய்திக்குறிப்பில், "நேற்று சென்னையில் உள்ள எனது அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு 6.5 கி.மீ வந்தடைய 110 நிமிடங்கள் ஆனது. பயணத்தின் ஒவ்வொரு நொடியும் எவ்வாறு கடக்க போகிறோம் எனும் பதைபதைப்பிலேயே கழிகின்றன.

இதை சீர் செய்ய இதுவரை ஒரே ஒரு அரசு ஊழியரோ அதிகாரியோ என் கண்களில் பட்டதில்லை. இலட்சக்கணக்கில் இவ்வழியாக பயணிக்கும் ஒருவர் கூட இது குறித்து வாய் திறப்பதில்லை. இன்னும் சில நாட்களில் பெரும் மழையை எதிர்கொள்ளப்போகும் இப்படிப்பட்ட சாலைகளால் சிங்காரச் சென்னை என்னாகுமோ!" என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai Traffic Director Thankar Bachan


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->