21 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகும் சேரனின் ஆட்டோகிராப்; ஏ.ஐ டிரெய்லர் வெளியீடு..! - Seithipunal
Seithipunal


இயக்குனர் சேரன் அவர்கள் பல வெற்றிப்படங்களை இயக்கியவர். அதிலும் குறிப்பாக, பாரதி கண்ணம்மா, பாண்டவர் பூமி, வெற்றிக் கொடிகட்டு, தவமாய் தவமிருந்து போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். 

இவர் கடந்த 2004-ஆம் ஆண்டு சொந்தமாகத் தயாரித்து, இயக்கி, நடித்தத் திரைப்படம் 'ஆட்டோகிராப்'. இதில் சினேகா, கோபிகா, மல்லிகா, கனிகா, இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படம் இது.

அத்துடன், இந்தப் படம் மூன்று பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்றது. இந்த நிலையில், 21 ஆண்டுகள் கழித்து இப்படம் விரைவில் ரீ-ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ஏ.ஐ மூலம் உருவாக்கப்பட்ட டிரெய்லரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.இதனை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

https://x.com/i/status/1892190026123133023


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cherans Autograph is being re released after 21 years


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->