GET OUT என்ற வார்த்தைக்கு உகந்தவர் பிரதமர் மோடி தான் - அமைச்சர் சேகர்பாபு.! - Seithipunal
Seithipunal


தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் என் வீட்டை முற்றுகையிடுவேன் என்று கூறும் அண்ணாமலைக்கு, தைரியம் இருந்தால் அண்ணா சாலைக்கு வரச்சொல்லுங்கள் என்று சவால் விட்டிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது:- "அறிவாலயத்திற்கு அண்ணாமலை ஏன் வரவேண்டும்? நானே வருகிறேன், வரக்கூடாது என்றால் அது என்ன ரெட் லைட் ஏரியாவா? என்று கேள்வி எழுப்பியிருந்தார். 

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு தெரிவித்ததாவது:- "நட்பு பாராட்டுவதற்காக பொன்.ராதாகிருஷ்ணன் அறிவாலயம் வரலாம். செங்கலை பிடுங்க வருவேன் என்றால் எப்படி அனுமதிப்பது? மூத்த அரசியல்வாதியான பொன்.ராதாகிருஷ்ணன் ரெட் லைட் ஏரியா என சொல்வது அவரின் எண்ணத்தை பிரதிபலிக்கிறது. GET OUT என்ற வார்த்தைக்கு உகந்தவராக இருப்பவர் பிரதமர் மோடி தான் என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

minister sekar babu speech about get out stalin


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->