கோர விபத்து: பீதியில் மக்கள்..... அமெரிக்காவுக்கு ஏன் இந்த நிலைமை ?
The planes collided other midair
அமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தில் விமான நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் இன்று காலை 8 மணி அளவில் புறப்பட்ட செஸ்னா 172எஸ் விமானமும், லங்கெய்ர் 360 எம் கே என்ற விமானமும் நடுவானில் ஒன்றுக்கொன்று மோதின.
இந்தக் கோர விபத்தில் இருந்த தல ஒருவர் என மொத்தம் 2 பேர்ச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. அமெரிக்காவைப் பொறுத்த வரையிலும் சமீப காலமாக விமான விபத்துகள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.
2025 ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி வர்த்தக ஜெட் விமானம் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று அமெரிக்காவின் தலைநகரமான வாஷிங்டனில் மோதி 67 பேர்ச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அதனைத் தொடர்ந்து ஜனவரி 31ஆம் தேதி பிலடெலிபியாவில் மருத்துவ பொருட்களை ஏற்றிச் சென்ற விமானம், விபத்தில் சிக்கியதில், அதிலிருந்து ஆறு பேர்க் கொல்லப்பட்டனர்.
பின்னர்ப் பிப்ரவரி முதல் வாரத்திலேயே மேற்கு அலாஸ்காவில் சிறிய ரக விமானம் ஒன்று நோமி பகுதியில் சிக்கி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர்ப் பலியானார்கள் கடந்த இரண்டு வாரங்களில் இது போன்ற பெரும் விபத்துகள் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது. இதனை அமெரிக்கா விமான போக்குவரத்து துறை எதிர்க் கொண்டுள்ளது.
இந்நிலையில், தற்பொழுது இரண்டு சிறிய ரக விமானங்கள் நடுவானில் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 2 பேர்ப் பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
The planes collided other midair