சட்டவிரோத பணபரிமாற்றம்; இயக்குனர் சங்கரின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை..!
Enforcement Directorate freezes director Shankar assets
இயக்குநர் ஷங்கருக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்பிலான சொத்துகளை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
இவர் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த 2022-ஆம் ஆண்டு அவருக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். அப்போது அவர்,அவருடைய வழக்கறிஞருடன் வந்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு 03 மணி நேரம் ஆஜராகி விளக்கம் அளித்து இருந்தார்.

இந்நிலையில், 2022-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் ஷங்கருக்கு சொந்தமான ரூ.10.11 கோடி மதிப்புள்ள 03 அசையாச் சொத்துகளை கடந்த 17-ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்க உத்தரவிட்டு உள்ளனர்.
தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட் படங்களை இயக்கிய இயக்குனர் மட்டும் அல்லது, இந்தியன், ஜீன்ஸ், ஜென்டில்மேன், பாய்ஸ், 2.0, அந்நியன், கேம்சேஞ்சர், என பல பிரமாண்ட படங்களை இயக்கியவர். இவருடைய சொத்துக்கள் முடிக்கிய சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Enforcement Directorate freezes director Shankar assets