ஜிவி பிரகாஷ் - சைந்தவி பிரிவுக்கு நான் காரணமா?உண்மையை உடைத்து பேசிய திவ்யா பாரதி! - Seithipunal
Seithipunal


சினிமா உலகில் பிரபலங்கள் விவாகரத்து செய்தால், அது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையாக மாறி விடுகிறது. அந்த வகையில், இசையமைப்பாளர்-நடிகர் ஜிவி பிரகாஷ் மற்றும் அவரது முன்னாள் மனைவி, பாடகி சைந்தவி விவாகரத்து செய்தது குறித்து பல்வேறு தகவல்கள் பரவின. இதில், 'பேச்சிலர்' பட நாயகி திவ்யா பாரதி காரணம் என சிலர் குற்றம் சுமத்தினர்.

ஜிவி பிரகாஷ் – சைந்தவி விவாகரத்து பற்றி உண்மைத்தன்மை இல்லாத செய்திகள் பரவ தொடங்கிய நிலையில், திவ்யா பாரதி  கூறியதாவது:

"நான் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவியின் ஜோடியை மிகவும் விரும்புவேன். ஆனால், சிலர் அவர்களது பிரிவுக்கு காரணம் நான் தான் என நினைத்து, என்னை திட்ட தொடங்கினர். குறிப்பாக பல பெண்கள் கடுமையாக விமர்சித்தனர். இந்த நிலை என்னை ஆழமாக பாதித்தது."

முன்னதாக, ஜிவி பிரகாஷ் தரப்பில் இருந்து திவ்யா பாரதி விவாகரத்திற்கு காரணமே இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், ஜிவி மற்றும் சைந்தவி விவாகரத்து பெற்றபோதும் இசை நிகழ்ச்சிகளில் இணைந்து பணியாற்றி வருகின்றனர். கடந்த ஆண்டு ஜிவியின் வெளிநாட்டு இசை நிகழ்ச்சியில், சைந்தவி மகளுடன் கலந்து கொண்டதும், அவர்கள் சேர்ந்து பாடியதும் வைரலானது.

திவ்யா பாரதி, ஜிவி பிரகாஷுடன் 'பேச்சிலர்' படத்தில் நடித்திருந்தார். தற்போது, ஜிவியின் 25வது படமான 'கிங்ஸ்டன்' திரைப்படத்திலும் அவரே கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்நிலையில், திவ்யா பாரதியை குற்றம் சுமத்தி விமர்சித்தவர்களுக்கு அவர் நேரடியாக பதிலளித்துள்ளதால், இந்த விவகாரம் மீண்டும் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Am I the cause of GV Prakash Chaindavi split Divya Bharti broke the truth


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->